படம் : மின்னல் முரளி.
நடிகர்கள் - டோவினோ தாமஸ், குரு சோமசுந்தரம்.
மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோக்கள் கிருஷ் சக்திமான் பட்டியலில் இருந்து மாறுபட்ட சூப்பர் ஹீரோவாக வெளியிட்டிருக்கிறது.
இத்திரைப்படம் இரண்டு பேரை பற்றிய கதை.
டெய்லரின் மகனான ஜெய்சனுக்கு தனது காதலியுடன் அமெரிக்காவில் போய் சென்று வாழ வேண்டும் என்று ஆசை.
தான் பல வருடங்களாக நேசித்த தனது காதலி வேறு ஒருவனுடன் ஊரை விட்டு ஓடிவிட்ட சோகத்தில் வாழ்க்கையை வெறுத்து டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறான் சிபு.
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று 700 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் ஒரு அதிசய மின்னல் ஒன்று அவர்களை தாக்கி விடுகிறது.
அந்த மின்னல் தாக்கிய தாக்கத்தில் அவர்கள் இருவருக்கும் உடல் அளவில் மாற்றங்கள் நிறைய ஏற்பட்டது உணர்ந்தார்கள். தாங்களுக்கு சூப்பர் பவர் கிடைத்திருப்பதை அறிந்து கொள்கிறார்கள்.
இரண்டு பேரும் தங்களுக்கு கிடைத்திருக்கும் சூப்பர் பவர் கொன்று தங்கள் சுய தேவைகளுக்காகவும், தனது நிர்ப்பந்த ஆசைகள் காரணமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதீத சூப்பர் பவர் கொண்ட இருவரில் ஒருவனை சூப்பர் வில்லனாகவும் மற்றொருவனை சூப்பர் ஹீரோவாகவும் மாற்றிவடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.