படம் - காடன்
நடிகர்கள் - ராணா, விஷ்ணு விஷால்.
காட்டைப் பாதுகாக்க ராணா கார்டன் என்கிற பெயரில் காட்டுவாசி மக்களை காட்டு விலங்குகளையும் பாதுகாப்பாக பார்த்து வருகிறார்.
காட்டினுள்ளே மிகப் பெரிய தொழிற்சாலை ஒன்றை கட்ட கோடிக்கணக்கில் செலவு செய்து திட்டமிடுகிறார் வில்லன்.
ஆனால் அந்த தொழிற்சாலை காட்டின் உள்ளே வரக்கூடாது என போராடி வருகிறார் காடன். பல்வேறு ஊழல்கள் நிறைந்த இந்த உலகில் இயற்கையை காப்பாற்ற பெரும் பாடு படுகிறார்.
கும்கி யானையை வளர்த்து அதை வைத்து தொழில் நடத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.
தொழிற்சாலை கட்டுவதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அத்துடன் யானையின் பாகன் விஷ்ணு விஷால் காட்டிற்குள் வருகிறார்.
விஷ்ணு விஷால் காட்டின் உள்ளே ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அந்தப் பெண் காட்டில் பாதுகாப்பதற்காக காவலர்கள் உடையில் துப்பாக்கியுடன் திரிந்து வருகிறார்.
தனது காதலை அவளிடம் சொல்லி நாளா இல்லையா? ராணா காட்டை எப்படி பாதுகாத்தார். என்பதே மீதிக்கதை.
படத்தில் ராணா கேரக்டர் கச்சிதமாக காட்டுவாசி ஏற்றது போல பொருந்தி விட்டது. அவருக்கு எதிராக தெரியாமல் விஷ்ணு விஷால் வில்லன்கள் கூட்டணியில் இணைந்து காட்டை அழிப்பதற்கு உதவி செய்து வருவது போல காண்பிக்கப்படுகிறது.