படம் - கோடியில் ஒருவன்.
நடிகர்கள் - விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்யா பிரபா, ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்பராயன்,
தனது ஊரில் கவுன்சிலராக பொறுப்பேற்று நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று நினைத்த கதாநாயகனின் அம்மாவை சில அரசியல்வாதிகள் சித்திரவதை செய்கிறார்கள். கதாநாயகனின் அப்பாவை கொன்று விடுகிறார்கள்.
கவுன்சிலர் அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் தண்ணீரில் விழுந்து உயிர் தப்பிய நிறைமாத கர்ப்பிணியின் மகன்தான் விஜய் ஆண்டனி.
ஐஏஎஸ் படிக்கும் கனவுடன் சென்னை வருகிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி. அவ்விடத்தில் நடக்கும் பல பிரச்சனைகளால் தனது ஐஏஎஸ் கனவு கனவாகவே போய்விடும் அங்கே கவுன்சிலராக போட்டி போடுகிறார்.
கவுன்சிலராக வெற்றி பெறுகிறார். வில்லன்கள் அவரை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். கவுன்சிலர் பதவி போய்விடுகிறது.
மீண்டும் எம்எல்ஏ பதவிக்கு போட்டி போடுகிறார். எம்எல்ஏ ஆனாரா ? இல்லையா என்பதே மீதிக்கதை.
வில்லன்கள் சூப்பர் சுப்பராயன், ராமச்சந்திர ராஜு, சூரஸ் பொப்ஸ் ஆகியோர்கள் பயங்கரமாக தனது வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கிராமத்திலிருந்து ஐஏஎஸ் படிக்கும் கனவுடன் சென்னைக்கு வரும் இளைஞர் வாழ்வில் நடக்கும் மோசமான நிகழ்வுகளும் அவர் வாழ்க்கையை மாற்றும் சூழ்நிலையையும் கச்சிதமாக படம்பிடித்துக் காட்டி உள்ளார்கள்.