படம் - ஓ மணப்பெண்ணே.
நடிகர்கள் - ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்.
ஹரிஷ் கல்யாண் வேலை இல்லாத ராசி கெட்ட இளைஞராக இத்திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறார். அவரது அப்பா எதற்கு பார்த்தாலும் கதாநாயகனை திட்டிக் கொண்டும் சளித்து கொண்டும் இருப்பார்.
அவரது நண்பர்கள் மட்டும் கதாநாயகனுக்கு உதவியாக இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக யூடியூபில் குக்கிங் சேனல் ஆரம்பித்து வீடியோ விடுகிறார்கள்.
கதாநாயகி ப்ரியா பவானி சங்கர் ஒரு பணக்கார வீட்டில் பிறந்த பெண்ணாக காணப்படுகிறார். ஏதாவது தனக்கென்று ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என அவர் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கிறார்கள்.தங்களைப் பற்றித் தாங்களே கூறிக்கொள்கிறார்கள்.
இருவரும் இணைந்து ஒரு பழைய வேன் ஒன்றை நவீன நடக்கும் ஓட்டலாக மாற்றுகிறார்கள். வேன் ஒன்றின் மூலம் உணவுகள் சமைத்து அதை திருமண நிகழ்வுகள் மற்றும் பல விசேஷ இடங்களில் பரிமாறி வந்தார்கள்.
தொழில் நினைத்ததைவிட அமோகமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கதாநாயகன் கதாநாயகியை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
அதேபோல கதாநாயகியும் கதாநாயகனை காதலித்து வருகிறார். இருவரும் சொல்வதற்கு வெட்கப்பட்டு அமைதியாக இருக்கிறார்கள்.
இரண்டு பேருக்கும் இடையில் ஒரு சிறிய சண்டை ஏற்படுகிறது. அதன் காரணமாக பிரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் பேசுவதை நிறுத்தி விடுகிறார்.
சண்டை போட்ட கதாநாயகனும் கதாநாயகியும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை..