படம் - புஷ்பா(2021)
நடிகர்கள் - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மடானா
இயக்குநர்- சுகுமார்.
டிசம்பர் 17ஆம் தேதி 2021 இல் வெளியான இந்தி தெலுங்கு கன்னடம் தமிழ் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் புஷ்பா.
ராஜலட்சுமி குரலில் என் சாமி என் சாமி என்கிற பாடல் இந்த திரைப்படத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.
அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகமாக பார்வையாளர்களைப் பெற்றது.
அல்லு அர்ஜுன் இந்த திரைப்படத்தில் செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பலின் தலைவனாக இருக்கிறார்.
இடையில் ராஷ்மிகா மந்தனா உடன் காதல் வலையில் விழுகிறார். அதன்பிறகு ரொமான்ஸ் மற்றும் கடத்தல் என இப்படியே செல்லுகின்ற அல்லு அர்ஜுன் கடைசியில் போலீசாரிடம் மாட்டினாரா ? இல்லையா ? என்பது மீதி கதை!
இத்திரைப்படத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருப்பதால் பெரும்பாலான பெரும்பாலான காட்சிகள் படக்குழுவினர் மூலமாக நீக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 1 பாகம் நல்ல வரவேற்பையும் வெற்றியும் பெற்றது ஒட்டி அடுத்த பகுதி 2022-ல் வெளியிடப்படும் என படக்குழு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.