படம் - உடன்பிறப்பே
நடிகர்கள் - சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி
இயக்குனர் -
உடன்பிறப்பே திரைப்படம் ஆயுத பூஜை அன்று திரைக்கு வெளிவந்த லேட்டஸ்ட் பாசமலர் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாகவும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் வீட்டு வேலைக்காரராக சூரி நடித்து இருக்கிறார்.
ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி அட்டகாசமாக தனது நடிப்பை பதிவிட்டு இருக்கிறார்.
சசிகுமார் அடிக்கடி வம்பு சண்டைக்கும் அடிதடிக்கு செல்வதால் சமுத்திரக்கனிக்கு இது பிடிக்கவில்லை. சசிகுமாரிடம் பலமுறை சமுத்திரகனி இந்த சண்டைகளை விட்டுவிட்டு அமைதியாக வாழுமாறு சொல்லிப் பார்த்தும் சசிகுமார் அடிதடி கட்டப்பஞ்சாயத்து விடவில்லை.
சமுத்திரக்கனியின் மகனும் சசிகுமாருடன் சேர்ந்து அடிதடி சண்டைகள் செய்ய கற்றுக் கொண்டான். இதே போல தான் ஒரு முறை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது சசிகுமார் மகனும் ஜோதிகா மகனும் கிணற்றில் தவறி விடுகிறார்கள்.
ஜோதிகா கிணற்றில் குதித்து தன் மகனை காப்பாற்றாமல் தன் அண்ணனின் மகனை காப்பாற்றி விடுகிறார். இந்த சம்பவத்தில் ஜோதிகாவின் மகன் இறந்து விடுகிறான்.
சமுத்திரக்கனி சசிகுமார் மீது கோபம் கொண்டு ஜோதிகாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். அதன்பிறகு சமுத்திரக்கனி சசிகுமார் இடம் பத்து வருஷத்துக்கு மேலாக பேசுவது இல்லை.
இறுதியில் சசிகுமார் , சமுத்திரகனி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை!
சசிகுமார் மற்றும் ஜோதிகாவிற்கு அண்ணன் தங்கச்சி கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்தி விட்டன. படம் முழுவதும் சூரி நடிப்பால் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது.