.

மாநாடு (2021)- அதிரடி டைம்லூப் திரைப்படம்

 படம்- மாநாடு 

நடிகர்கள்- சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி, சந்திரசேகர், கருணாகரன்,பிரேம்ஜி

தயாரிப்பாளர்- சுரேஷ் காமாட்சி.

இயக்குனர்-வெங்கட் பிரபு. 



தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட முதல் டைம்லூப் திரைப்படம் மாநாடு.

இத்திரைப்படத்தின் சிம்புவின் பெயர் அப்துல் காலிக். அப்துல் நண்பர்கள் கருணாகரன் பிரேம்ஜி ஆகியோர். பிரேம்ஜி காதலிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு திருமணம் செய்யப் பட்டிருந்தது.

அந்தத் திருமணத்தில் புகுந்து மணப் பெண்ணை தூக்கிச் சென்று பிரேம்ஜி கல்யாணம் செய்து வைப்பது தான் அப்துல் மற்றும் கருணாகரன் அவர்களின் திட்டம்.

அதற்காக மும்பையில் இருந்து விமானத்தில் வந்து இறங்கும் சிம்பு வழியில் சீதா என்கிற கல்யாணியைப் பார்க்கிறார். சிம்புவும் கல்யாணியும் சேர்ந்து ஒன்றாக திருமணத்திற்கு செல்கிறார்கள்.

திட்டமிட்டப்படியே முஸ்லிம் மணப்பெண்ணை தூக்கி விட்டனர். பின்னால் முஸ்லீம் மாப்பிள்ளையை வீட்டார்கள் துரத்தி வர காரின் வேகமாக திருமணத்திற்கு செல்கிறார்கள்.

அப்படி வேகமாக செல்லும் வழியில் ஒருவன் அவர்கள் செல்லும் காருக்கு முன்பாக விழுந்து பிடித்து தள்ளப்படுகிறான். பின்னால் வந்த போலீஸ்காரர்கள் சிம்புவுடன் அவரது நண்பர்களையும் திருமண பெண்ணையும் அழைத்துச் சென்று ஒரு குடோனில் வைக்கிறார்கள்.

ஏசிபி தனுஷ்கோடி என்கிற எஸ் ஜே சூர்யா அப்போதுதான் என்ட்ரி ஆகிறார். அதன்பிறகு அவரது வில்லத்தனம் ஆரம்பிக்கிறது.

மாநாடு (2021)- அதிரடி டைம்லூப் திரைப்படம்

எஸ் ஜே சூர்யா சிம்புவை கட்டாயப்படுத்தி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். திடீரென்று மேடையில்  பேசிக்கொண்டிருக்கும் முதலமைச்சரை சுட்டுக் கொல்லச் செல்கிறார்.

அப்படி முதலமைச்சரை கொல்லவில்லை என்றால் சிம்புவின் நண்பர்களை கொன்று விடுவேன் என்று எஸ் ஜே சூர்யா மிரட்டுகிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் மீது துப்பாக்கி வைத்து விட்டு விடுகிறார். முதலமைச்சரை சுட்ட காரணத்திற்காகவே பொலிசாருக்கு சிம்புவை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்க திரும்பவும் சிம்பு விமானத்தின் உள்ளே ஏற்கனவே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வருகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் புலம்பி வருகிறார்.

மாநாடு (2021)- அதிரடி டைம்லூப் திரைப்படம்

மாநாடு திரைப்படம் திரைக்கு வந்த இரண்டே நாளில் இரண்டரை கோடி அளவிற்கு வசூல் செய்துவிட்டது.

தற்போது மூன்று வாரங்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து கெட்ட பிரமாண்டமான முதல் டைம்லூப் திரைப்படம்.

மாநாடு (2021)- அதிரடி டைம்லூப் திரைப்படம்

அப்துல் காலிக் எப்பொழுதெல்லாம் செத்து செத்து போகிறாரோ அப்பொழுதெல்லாம் திரும்பவும் விமானத்தின் உள்ளே எழுந்து எழுந்து வருகிறார். அதேபோல எஸ் ஜே சூர்யாவும் அவரது வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து எழுந்து வருகிறார்.

இப்படி சிம்புவுக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கும் நடக்கும்  எந்த டைம்லூப் நிர்வாண சுவாரஸ்யமாகவும் திரையரங்குகளில் கைத்தட்டல்களால் ஆரவாரத்தோடு விறுவிறுப்பாக செல்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال