.

குருப் (2021)- தமிழ் திரைப்படம் திரைவிமர்சனம்

 

படம் - Kurup 

நடிகர்கள் - துல்கர் சல்மான், ஷோபிடா துலிபலா 

இயக்குனர் - ஶ்ரீநாத் ராஜேந்திரன்.



இந்த திரைப்படம் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கேரளாவில் வாழ்ந்து வந்த சுகுமார குரூப் என்பவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.




சுகுமார குரூப் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். பாம்பேயில் விமான படையில் பயிற்சி பெற்று வேலை செய்து வருகிறார் துல்கர் சல்மான்.

ஆனால் திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக துல்கர் சல்மான் இறந்துவிட்டதாக பொய்யான வதந்தியை தகவல் ஒன்று பரவுகிறது. அதன்பிறகு துல்கர் சல்மான் தனது பெயரை குருப் என்று மாற்றிக்கொண்டு வெளிநாடு செல்கிறார்.




வெளிநாட்டுக்கு சென்று குரூப் என்ற பெயரில் இன்சூரன்ஸ் ஒன்றை செய்து விட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார். இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவரது இன்சூரன்ஸ் பணத்தை எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

பல்வேறு கெட்டப்புகளில் விதவிதமாக உடை அணிந்து வித்தியாசமாக நடித்து இருக்கிறார். அவரது எல்லாம் கேரக்டருமே அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது.

அந்த இன்சூரன்ஸ் பணத்தை அவர்களிடம் இருந்து துல்கர் சல்மான் கொடுத்தாரா? இல்லையா? 

நான் இறந்து விட்டதாக பொய் சொல்லி தனது பெயரை மாற்றிக் கொண்டு வெளிநாடு செல்வதற்கு என்ன காரணம்?

என்பதுதான் மீதிக்கதை.. நாயகியாக நடித்திருக்கும் ஷோபிடா துலிபலா  தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் குரூப் திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படம்.
Previous Post Next Post

نموذج الاتصال