.

Mobile Network Disable problem solve செய்வது எப்படி?

 உங்கள் மொபைலில் நெட்வொர்க் சிக்னல் disable ஆகிடுச்சா?

நாம் தினமும்  பயன்படுத்தும்போது நன்றாகதான்  இருக்கும்.


சரி செய்யும் வழிமுறை 1:

Airplane mode on செய்து விடுங்கள்.1 அல்லது 2 நிமிடம் கழித்து  airplane mode ஐ off செய்து விடுங்கள்! 

இப்படி செய்வதால் ஒரு நிமிடம் உங்கள் மொபைல் network refresh ஆகும். இந்த சமயத்தில் உங்கள் மொபைலில் உள்ள நெட்வொர்க் disable problem சரியாக வாய்ப்புகள் உள்ளது. அப்படியும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

சரி செய்யும் வழிமுறை 2:

இப்பொழுது உங்கள் மொபைலில் இருக்கும் settings உள்ளே செல்லுங்கள். அதில் sim Card and mobile networks என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனுள் செல்க. இப்பொழுது நீங்கள் பயன்படுத்தும் சிம்கார்ட் பெயரை தேர்வு செய்து கொள்க. 

Jio sim பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நான் அதனை தேர்வு செய்து கொள்கிறேன். இப்பொழுது அதில் (Access Point Names)Apn settings என்று இருக்கும். 

அதனை தேர்வு செய்து கொள்க. Scroll செய்து கீழே வந்தால் barriar என்று ஒன்று இருக்கும். அதை தேர்வு செய்து LTE என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

 இப்போது save செய்து விட்ட பிறகு உங்களது பிரச்சினையை சரி ஆகி இருக்கலாம். அப்படியும் சரியாகவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அடுத்த வழிமுறையை பின்பற்றவும்.

சரி செய்யும் வழிமுறை 3:

உங்களது செட்டிங்ஸ் ல sim Card and mobile networks என்கிற இந்த பக்கத்திலே sim Card name and sim Card number add பண்ணினாலே உங்கள் பிரச்சனை சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லை என்றால் அடுத்த வழிமுறையை பின்பற்றவும்.

சரி செய்யும் வழிமுறை 4:

Settings உள்ளே sim Card and mobile networks பக்கத்திலே கீழே prefered network type என்று இருக்கும்.prefer 3G,2G only என்று இருந்தால் அதை prefer LTE என்று மாற்றிக் கொள்ளுங்கள்..

 இந்த வழிமுறையில் கட்டாயம் உங்கள் மொபைலில் வந்திருக்கும் network disable problem சரியாகி விடும். அப்படியும் சரியாகவில்லை என்றால் கடைசியாக இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

சரி செய்யும் வழிமுறை 5:

Settings உள்ளே செல்லுங்கள்.sim Card and mobile networks பக்கத்திலே கீழே உள்ள mobile networks என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள். அது ஆன் செய்யப்பட்டிருந்தால் அதை ஆஃப் செய்துவிடுங்கள்.

 இப்போது உங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நெட்வர்க் சிக்னல் காண்பிக்கும். அதில் நீங்கள் எந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகிறீர்களோ அதை தேர்வு செய்து விடுங்கள்! இப்போது கட்டாயம் உங்கள் மொபைலில் நெட்வொர்க் ஆன் ஆகிவிடும்.

மேலும் தெளிவாக உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்!


Previous Post Next Post

نموذج الاتصال