.

Laptop to phone and phone to pc file transfer tamil

 லேப்டாப்பில் இருந்து மொபைலுக்கோ அல்லது மொபைலில் இருந்து லேப்டாப்புக்கோ  போட்டோ , வீடியோ ஆடியோ மற்றும் டாக்குமெண்ட் files  ஐ எப்படி எளிதாக ஒரு செகண்டில் ஷேர் செய்வது என்பதைப்பற்றி பார்ப்போம்.


பொதுவாக லேப்டாப்பில் இருந்து மொபைலுக்கு file transfer செய்வதற்கு  SHAREIT, அல்லது Data Cable மூலமே file transfer செய்ய முடியும்.
ஆனால் இந்த பதிவில் நாம் இது எதுவுமே இல்லாமல் வெறும் ஒரு சிறிய software மூலம் மட்டுமே file transfer செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.


லேப்டாப்பில் இருந்து மொபைலுக்கு file transfer:

லேப்டாப்பில் இருந்து மொபைலில் டிரான்ஸ்பர் செய்ய முதலில் லேப்டாப்பில் google chrome இல் செல்லுங்கள். Google Chrome ல search bar ல aircopy என்று டைப் செய்து அந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் கீழே சாப்ட்வேர் டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் பண்ணி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



டவுன்லோட் செய்த பிறகு உள்ளே செல்லுங்கள். முதல் பக்கத்தில் welcome,  Phone to pc , pc to phone இவை மூன்று மட்டுமே இருக்கும்.
இதில் pc to phone என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இப்போது ஒரு கியூ ஆர் கோடு காண்பிக்கும்.

பிறகு உங்கள் மொபைலில் scaner அப்ளிகேஷன் ல போய் இந்த qr code ஐ ஸ்கேன் செய்யுங்கள்! பிறகு ஒரு website link ல செல்லும்.

இப்போது  லேப்டாப் ல select files அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் உள்ள எந்த பைலை நீங்கள் ஷேர் பண்ண விரும்புகிறீர்களா அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

போது உங்கள் மொபைலில் தானாகவே அந்த பழைய ஷேர் ஆகி இருக்கும். அதோடு வெளியே வந்து விடாமல் அந்த பைலை கிளிக் செய்து கீழே மூன்று புள்ளிகள் இருக்கும் .அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பிறகு தான் உங்கள் மொபைலில் சேவ் ஆகும்.

மொபைலில் இருந்து லேப்டாப்புக்கு file transfer: 

அதேபோலத்தான்.இப்போது phone to pc என்கிற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள். ஒரு qr code வரும். அதனை உங்கள் மொபைலில் qr scanner மூலம் ஸ்கேன் செய்து வெப்சைட் உள்ளே செல்லுங்கள்.

மொபைலில் select files அப்படின்னு ஒரு ஆப்ஷன் காண்பிக்கும்.அதை கிளிக் செய்து உங்கள் மொபைலில் இருக்கும் பைலை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.




இப்போது உங்கள் லேப்டாப்பில் அந்த file save ஆகி இருக்கும். அவ்வளுதாங்க!! இனி  ஒரு நிமிஷத்துல  ஃபைல் டிரான்ஸ்ஃபர் ஈஸியாக செய்யலாம்!



Previous Post Next Post

نموذج الاتصال