தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று காலமாக இருப்பதால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள்.
ஆன்லைன் மூலமாக படிப்பதற்கு புத்தகங்கள் சரியாகக் கிடைப்பதில்லை. இந்த பதிவில் நாம் ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறந்த அப்ளிகேஷன் ஒன்றை பற்றி பார்க்க போகிறோம்.
Diksha அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Diksha :
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மற்றும் மேல் படிப்பு படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் Diksha அப்ளிகேஷன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வழங்குகிறது.
மேலும் Diksha ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வு வினாத்தாள்கள், மாணவர்களுக்கு சிறு பாடத் தேர்வுகள் நேர வாரியாக வைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகண்டு
தேர்வு எழுதும் திறனை பெறலாம் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
போட்டி தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் Diksha அப்ளிகேஷனை தாராளமாகவும் கட்டாயமாக பயன்படுத்தலாம். போட்டித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அவற்றுக்கான விடைகளுடன் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்த அப்ளிகேஷனில் வருடம் வாரியாக கொடுக்கப்பட்டிருக்கும்.
எந்த வருடத்திற்கு தேவையான போட்டி தேர்வு வினாத்தாள்கள் வேண்டுமோ அந்த வருடத்தை தேர்வு செய்து நீங்கள் வினாத்தாள்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
