.

லேப்டாப்பில் Google meet பயன்படுத்துவது எப்படி ?

 தற்போதைய காலத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு செயலிகள் மூலம் பாடம் எடுக்கிறார்கள்.

ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. google meet மற்றும் zoom meet போன்ற அப்ளிகேஷன்கள் பொதுவாக அனைத்து ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். Zoom meeting ல நிறைய பிரச்சனைகள் இருப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்துவது google meet தான்.

 


Google meet என்றால் என்ன ?

> பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூகுளின் தயாரிப்பு Google meet  ஆகும்.

> ஆண்ட்ராய்டு மொபைல் உள்ளவர்கள் ப்ளே ஸ்டோர் சென்று கூகுள் மீட் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் லேப்டாப் வைத்திருப்பவர்கள் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

> நீங்கள் கூகுளில் சென்று google meet என்று டைப் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு முதலாவதாக google meet.com என்று வரும்.

> அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். இப்பொழுது new meeting மற்றும் join with a code என்று இதுபோல உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கேட்கும்.
> உங்களுடைய ஆன்லைன் வகுப்பிற்கு ஆசிரியர்கள் ஒரு google meet லிங்க் ஐ அனுப்பி இருப்பார்கள். அதில் கடைசியாக ஒரு பத்து எண்ணிக்கையிலான code ஒன்றை enter செய்ய வேண்டும்.

> இப்பொழுது மைக் மற்றும் கேமரா  தோன்றும் .அவை இரண்டையும் ஆப் செய்து விடுங்கள். பிறகு கீழே இருக்கும் join meeting என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து விடுங்கள். அடுத்ததாக உங்களுக்கு ஆன்லைன் வகுப்பு ஓபன் ஆகி விடும்.

> இதே முறையை நீங்கள் உங்கள் மொபைலிலும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தாராளமாக ஆன்லைன் மூலம் பாடம் படித்துக் கொள்ளலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال