சபாபதி- தமிழ் திரை விமர்சனம்
ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர் சந்தானம் மற்றும் ப்ரீத்தி வர்மா நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சபாபதி.
நடிகர் சந்தானம் நடிப்பில் வித்யாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம் சபாபதி ஆகும். ஒரு திக்குவாய் இளைஞர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்த அவரது பாணியில் எடுத்துரைப்பதே இந்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் அவரது பெயர் சபாபதி. அவரது அப்பாவாக எஸ் கே பாஸ்கர் நடித்திருந்தார். சிறுவயதிலிருந்தே தனது திக்கி திக்கி பேசும் பழக்கத்தினால் பல அவமானங்களை சந்தித்து சந்தானம் பெரியவன் ஆனதும் அதை அவமானங்களை சந்தித்து வருகிறார்.
சபாபதி நண்பராக இப்படத்திற்கு விஜய் டிவி புகழ் நடித்திருந்தார். அவரது கேரக்டருக்கு ஏத்த காமெடிகளை ஏற்று சரியாக நடித்திருந்தார். சபாபதி அவர்களின் அப்பா எம்எஸ் பாஸ்கர் 60 வயது பணிநிறைவு முடிந்து பள்ளியிலிருந்து கிளம்பிய அவர் வீட்டில் செய்யும் ரகளைகள் திரையரங்கை அலற விட்டது.
எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் ஏகப்பட்ட காமெடிகளை சபாபதி செய்திருப்பார். தனது காதலை சொல்ல முடியாமல் சிரமப்படும் சபாபதி ஒவ்வொரு முறையும் சொல்லப் போகும் போது ஒரு ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்.
வில்லனாக சாயாஜி சிண்டே ,வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்தார்கள். காமெடி கலந்த வில்லத்தனத்தை வழக்கம்போல இந்த திரைப்படத்தில் காட்டியிருக்கிறார் சாயாஜி சிண்டே.
அரசியலில் போட்டியிடும் சாயாஜி ஷண்டே அரசியலுக்காக மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக 6 பெட்டிகள் நிறைந்த கோடி கோடியாக கருப்பு பணத்தை இரவோடு இரவாக அவரது தம்பியிடம் சொல்லி கடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஒரு விபத்தாகி பணப் பெட்டிகள் வண்டியோடு எரிந்து விட்டது. வண்டியிலிருந்த வில்லனின் தம்பி வம்சி கிருஷ்ணா தப்பித்து விட்டார். போலீசார் விசாரணையில் 5 பெட்டிகள் மட்டும் எரிந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இன்னொரு பெட்டி எரியவில்லை என அறிந்து கொண்ட வில்லன் சாயாஜி சிண்டே மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் பெட்டியை தேடி அலைகிறார்கள்.
அந்த பெட்டி சபாபதி இடம் கிடைத்துவிடுகிறது. அந்த பெட்டியில் இருக்கும் பணத்தை வைத்து கலைஞரின் நகைச்சுவைகள் மக்களை விரும்பி பார்க்க வைத்தன. கடைசியாக பெட்டி போலீசார் இடமும் செல்கிறது. அதன்பிறகு வில்லன் சாயாஜி சிண்டே வை கைது செய்தனர் போலீசார்.
இறுதியாக சபாபதி தனது காதலியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. படம் முழுக்க காமெடியாகவும் சுவாரசியமாகவும் சென்றது.