> சாதாரணமாக ஃபேஸ்புக் profile ல username change செய்வது கடினமான ஒன்று. அதை மாற்றுவதற்கான எந்த ஒரு ஆப்ஷனும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனில் profile பக்கத்தில் இருக்காது.
> அது எப்படி மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் உங்கள் பேஸ்புக் அப்ளிகேஷன் உள்ளே செல்லுங்கள். அங்கே மேலே ஐந்து ஆப்ஷன்கள் இருக்கும் அதில் மூன்று கோடுகள் இட்டபடி ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பிறகு கீழே Settings and Privacy என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும்.அந்த ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு மறுபடியும் SETTINGS என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ள Personal And Account Information என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அங்கே Name என்று இருக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்க. அதில் நீங்கள் பேஸ்புக்கில் என்ன பெயர் வைத்திருக்கிறீர்களா அந்தப் பெயர் காட்டும்.
அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த பெயருக்கு பதிலாக நீங்க இது எந்த பெயர் வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பெயரை டைப் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிறகு save என்கிற ஆப்ஷனை தேர்வுசெய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட் Username மாறி இருப்பதை நீங்களே பார்க்கலாம்.