Doctor - movie review:
Movie - Doctor
Actors - சிவகார்த்திகேயன், பிரியா மோகன் யோகி பாபு, kindsly, மற்றும் பல திரைப் பிரபலங்கள்.
Director - நெல்சன்
Producer - சிவகார்த்திகேயன்.
Music - அனிருத்.
'டாக்டர்' திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் சிவகார்த்திகேயன் ஒரு மிலிட்டரி டாக்டர். ஆரம்பத்திலேயே படம் காஷ்மீர் எல்லையில் அடிபட்டு இருக்கும் மிலிட்டரி ஆபீஸர் மற்றும் டெரரிஸ்ட் ஆகியோருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர் வேடத்தில் தோன்றுவார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் திருமணம் செய்வதற்கு ஏற்கனவே பார்த்து வைக்கப்பட்டிருந்த மணப்பெண் கதாநாயகி பிரியா மோகன் சிவகார்த்திகேயனை திருமணம் செய்ய மறுத்ததால் சிவகார்த்திகேயன் மிலிட்டரி டாக்டர் வேலையில் இருந்து வீடு திரும்பினார்.
அதன் பிறகு ஏன் பிடிக்கவில்லை எதற்கு பிடிக்கவில்லை என்று கேட்பதற்காக பிரியா மோகன் வீட்டிற்கு சிவகார்த்திகேயன் தனது பெற்றோருடன் சென்றார். பிரியா மோகன் பல்வேறு காரணங்களை கூறி சிவகார்த்திகேயனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
அந்த சமயத்தில் தான் நடிகை பிரியா மோகன் அவரது அண்ணனின் ஒரே பெண் சின்னு பள்ளி முடித்து இன்னும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைகிறார்கள்.
பள்ளியில் சென்று விசாரித்ததற்கு பள்ளியில் அரை நாள் விடுமுறை விட்டதால் மாணவர்கள் எப்போது வீட்டிற்கு சென்று விட்டார்கள் என்றும் இதற்கு பள்ளி பொறுப்பாகாது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறிவிட்டார்.
போலீசிடம் சென்று புகார் கொடுக்க போலீசார்கள் பிரியா மோகன் வீட்டுக்கு ஒரு காவல் அதிகாரியை kindsly அவர்களை அனுப்பி வைக்கிறார்கள் போலீசார்.முடிவில் சின்னு வை யாரோ கடத்தி விட்டார்கள் என கண்டுபிடித்து விடுகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னுவை காப்பாற்றும் முயற்சியில் பிரியாம தனது குடும்பத்தினருடன் ஈடுபடுகிறார். இவற்றுக்கு இடையில் யோகி பாபு மற்றும் kindsly இவர்கள் செய்யும் காமெடி மற்றும் அளபரைகள் திரையரங்கு முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
நடிகர் வினய் டாக்டர் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக வலம் வருகிறார். இவரது வேலை இளம்பெண்களை கடத்தி அவர்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதுதான். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை குடோனில் அடைத்து வைத்து அவர்களுக்கு உணவிட்டு மிருகங்களை போல வளர்த்து வருகிறார்.
அவர்கள் பருவ வயதை நெருங்கி விட்டதும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதுதான் அவரது திட்டமே. ஒரு ஓட்டல் உரிமையாளர் ஆக நடித்து யாருக்கும் தெரியாமல் பெண்களை கடத்தி விற்பனை செய்து வருகிறார்.
பல வழிகளில் போராடிய நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக வினய் அவர்களின் இடத்தில் தான் பெண் குழந்தை உள்ளது என கண்டுபிடித்து விடுகிறார்.
வினய் அவரின் வழியில் நடிகர் சிவகார்த்திகேயன் ஐஸ்கிரீம் கடை ஒன்றை நடத்தி அவரும் பெண்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக ஒரு மாயை ஏற்படுத்தி நடிகர் வினய் அவர்களை நம்ப வைத்து விடுகிறார். அதன்பிறகு வில்லனுடன் இணைந்து நம்ப வைத்து கடைசியில் வில்லன் கண்டுபிடித்து விடுகிறார்.
வில்லனிடம் இருந்து அவர்கள் குழந்தையை விட்டார்களா? இல்லை வில்லன் அவர்களை கொன்று விட்டானா? என்பதுதான் மீதிக்கதை.
படம் முழுவதும் சுவாரசியமாகவும் காமெடியும் ஆகவும் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.