நான் அனைவரும் Twitter அப்ளிகேஷனை பயன்படுத்தி இருப்போம். பயன்படுத்தி வருகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் போது அதில் வரும் photos and videos download செய்து வைக்கத் தோன்றும்.
அதை நாம் மிகவும் எளிதாக செய்து விடலாம். முதலில் நாம் Twitter அப்ளிகேஷனில் இருக்கும் போட்டோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
டுவிட்டரில் நீங்கள் ஏதேனும் புகைப்படங்கள் டவுன்லோட் செய்ய அந்த புகைப்படத்தின் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது மேலே உங்களுக்கு மூன்று புள்ளி போல option காண்பிக்கும்.
அதை நீங்கள் கிளிக் செய்து save image என்கிற ஆப்ஷனை கொடுத்துவிட்டால் உங்கள் மொபைலில் ட்விட்டர் எனும் போல்டரில் நீங்கள் டவுன்லோட் செய்த அனைத்து புகைப்படங்களும் இருக்கும்.
அடுத்ததாக ஒரு வீடியோவை எப்படி நாம் டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். நீங்கள் வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை.
அந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
சரி இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். முதலில் நீங்கள் இதை ப்ளே ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் ட்விட்டர் பக்கத்தில் எந்த வீடியோவை நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கு கீழே share என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்து copy link எனும் ஆப்ஷனை கொடுத்து அந்த லிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பிறகு இந்த அப்ளிகேஷனில் வந்தால் தானாகவே அந்த வீடியோ லிங்க் generate ஆகி விடும். கீழே டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன்கள் காட்டும். உங்களுக்கு எந்த format ல வீடியோக்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் இதைப் பற்றிய தெளிவான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.