தமிழ் திரை உலகில்" சூப்பர் ஸ்டார்" என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் அனைத்தும் புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் தான் இருக்கும். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்றவாறு நல்ல கருத்துள்ள வசனங்களை பதிவிட்டு இருப்பார்.
அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலர் பேரில் அவரது வசனத்திற்கு வந்தவர்கள்தான் அதிகம். அவர் நடிப்பில் வெளிவந்த எல்லா திரைப்படங்களிலும் நல்ல கருத்துள்ள பாடல்களே அதிகம் பாடியிருப்பார்.
கொடுத்திருக்கும் அவர் தமிழ் திரை உலகிற்கு மூத்தவராக ஆகிவிட்டார்.
தனது திறமைக்கு கிடைத்த விருதை கூட மக்களுக்கு சமர்ப்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். விருதை பெற்று ரஜினிகாந்த் மக்களிடம் கூறியதாவது,
" மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை என்னை உருவாக்கிய என் குருநாதர் கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் திரு.ராஜ் பகதூர் அவர்களுக்கும் என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். "
என்று நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
" என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி 🙏🏻 " என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.