பொதுவாக திரைப்படங்களே வசூல் சாதனை படைத்து வரும். கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் வசூலை குவிக்கும். ஆனால் திரைப்படங்களை விட வெப் சீரிஸ் வசூலை குவித்தது இதுவே முதல் முறையாகும்.
வெப்சீரிஸ் என்றால் என்ன?
நாம் எல்லோரும் சன் டிவி,கலைஞர் டிவி, ஜீ தமிழ்,விஜய் டிவி,இதுபோல பல்வேறு டிவி சேனல்களில் சீரியல்கள் பார்த்து இருப்போம். சீரியல்கள் என்பது தொடர்ச்சியாக பகுதி பகுதியாக நடித்து வெளியிடப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோலத்தான் ஒரு முழு திரைப்படத்தை மிகப்பெரிய திரைப்படம் அதை பகுதி பகுதியாக ஓடிடி இணையதளங்களில் வெளியிடப்படுவது வெப்சீரிஸ் எனப்படும்.
Zee 5, amozon prime video, Netflix மற்றும் பல ஓடிடி தளங்கள் உள்ளன. இவற்றிலெல்லாம் பல திரைப்படங்களும் பல வெப்சீரிஸ்களும் தினமும் வெளியிடப்பட்டு தான் வருகிறது. அதை நாம் மெம்பர்ஷிப் முறையில் கலந்துகண்டு பார்த்து மகிழ முடியும்.
அப்படி Netflix நிறுவனத்தால் வெளியிட பட்டவைதான் MONEY HEIST மற்றும் SQUID GAME ஆகும். இந்த வெப்சீரிஸ் கள் வெளியிடப்பட்ட ஓரிரு வாரங்களில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை தன் கைவசம் ஆக்கிக் கொண்டது. இதுவரை Money Heist சீரிஸ் மட்டும் கோடிக்கணக்கில் வசூலை குவித்து ஏகப்பட்ட ரசிகர்களை வென்றுள்ளது. தற்போது கூட Money Heist 5 பிரம்மாண்டமாக Ott தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதே போலத்தான் squid game தற்போது உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் வரவேற்பு பெற்றுள்ளது. தென்கொரியாவில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட Squid Game திரைப்படத்தை பார்த்து புதிதாக 44 லட்சம் பேர் இணைந்துள்ளதாக Netflix நிறுவனம் தெரிவித்துள்ளது.