நீங்கள் எல்லோரும் தனுஷின் பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள். அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தனக்கென்று ஒரு சொந்த பைக் வாங்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பார்.
முதலில் டிவியில் வரும் பைக்குகளை பார்த்து அவரது அம்மாவிடம்"அம்மா!அம்மா!அந்த பைக் நல்லா இருக்கு ல! அதேபோல ஒரு பைக் எனக்கு எடுக்கலாமா? என்று மிகுந்த ஆசையோடு கேட்பார்.
ஆனால் அவரது அம்மா" நீ எல்லாம் பைக் ஓட்ட மாட்ட! உனக்கு ஏற்றது போல் ஏதாவது டிவிஎஸ் இல்லன்னா சைக்கிள் இதுபோல வாகனங்களை பாரு" என்று அவரது ஆசையில் மண் அள்ளி போடுமாறு பேசி விடுவார்.
இருந்தாலும் நடிகர் தனுஷ் அவரது லட்சியத்தை விடவில்லை. எப்படியாவது ஒரு பைக் வாங்கிவிடவேண்டும். என்று உறுதியோடு இருந்தார். ஒருமுறை அவரது நண்பரிடம் பைக் ஓட்டுவதற்கு கேட்டதற்கு அவரது நண்பர் ஏதேதோ காரணங்களைக் கூறி பைக்கை தர மறுத்துவிட்டார். அதிலிருந்து அவரது பைக் வெறி மேலும் அதிகமானது.
| பைக் வாங்கிய பிறகு ரோட்டில் |
| பைக் வாங்கும்போது ஷோரூமில் |