.

நடிகை சமந்தாவுக்கு விவாகரத்து! ரசிகர்கள் குழப்பம்!

 தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் டான் திரைப்படத்தில் அவர் ராகவா லாரன்ஸ் உடன் அண்ணனாக நடித்தார். அதன் பிறகு தோழா, தேவ்தாஸ் மற்றும் பல திரைப்படங்கள் தமிழில் நடித்திருக்கிறார். அவருக்கு வயதான காரணத்தினால் தற்போது அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. 

அவரது மகனான நாக சைதன்யா தற்போது சினிமாவில் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர்  நடிகை சமந்தா. 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகனான நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு திருமணம் நடந்தது.


திருமணமான  பிறகும் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனின் சீமராஜா, பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் நாக சைதன்யாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

இதனால் ஒருவித மன சங்கடமான நாகசைதன்யா சமந்தாவை சினிமா நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் சமந்தா சினிமாவில் நடிப்பது என்னுடைய லட்சியம்! அதற்கு குறுக்கே யார் வந்தாலும் நான் உதறித் தள்ளிவிட்டு தான் செல்வேன்! என்று கூறியுள்ளார்.

 தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக படப்பிடிப்புகள்  நிற்கக் கூடாது! என்பதற்காக தனது கணவர் நாக சைதன்யாவை விவாக ரத்து செய்வதாக ஒத்துக் கொண்டார்.


நாக சைதன்யாவும் சமந்தாவும் ஒருவருக்கு ஒருவர் சமரசத்தோடு பிரிந்து வாழ்வதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். விவாகரத்தின் போது நாக சைதன்யாவின் குடும்பத்தினர் கொடுத்த 200 கோடி ஜீவனாம்சத்தை வாங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


Previous Post Next Post

نموذج الاتصال