.

10 கிலோ உணவை சாப்பிட்டால் 20 ஆயிரம் ரூபாய் பரிசு!

 உணவுப் பிரியர்களை குறிவைத்து நடத்திவரும் உணவு பந்தயங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் வருகிறது.

 இந்த உணவு பந்தயங்கள் எதற்காக வைக்கப்படுகின்றன?

உணவை சாப்பிடுவதில் போட்டி வைப்பதால் போட்டியில்  உணவு சாப்பிட முடியாமல் தோற்ற போட்டியாளர்கள் இடமிருந்து  எளிதாக உணவை கொடுத்த கடைக்காரர்கள் பணம் சம்பாதித்து விடுவார்கள். ஒருவேளை போட்டியாளர் வெற்றி பெற்றுவிட்டால் கொடுத்த உணவும் கொடுப்பதாக சொன்ன பணமும் கடைக்காரருக்கு நஷ்டமாக போய்விடும். இந்த உணவு பந்தயத்தில் நஷ்டமும் லாபமும் கடைக்காரருக்கு உண்டு. 


டெல்லியில் உள்ள ஒரு ரோட்டோர உணவகத்தில் ஒரு உணவு பந்தயம் நடத்த போவதாக அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்தார். தன் கடையை பிரபலமாக்க இதுபோல பந்தயங்கள் டெல்லியில் வைப்பது வழக்கம். 

என்ன போட்டி என்றால் 30 முட்டையும் நூடுல்ஸ் கலந்து தயாரிக்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள உணவை 20 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிப்பவர்கள் ரூபாய் 20 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்! என்று அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் பாருங்க! நிறைய ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கூட இல்லாமல் தவிக்கிறார்கள். இங்க சாப்பாட்டை வைத்து பந்தயம் கட்டி விளையாடுகிறார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال