2012 ஆம் ஆண்டில் வெளிவந்த " 3 " திரைப்படம் ரொமான்ஸ் கலந்த குடும்ப திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன்,சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து நடித்து இருப்பார்கள்.
நடிகர் தனுஷுக்கு துணை நடிகராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். தனுஷ் (ராம்) சுருதி ஹாசன் மீது வைத்த காதலால் சுருதிஹாசன் செல்லும் டியூஷனுக்கு தனுஷும் செல்வார். துணைக்கு சிவகார்த்திகேயனை அழைத்து செல்வார். சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் செய்யும் அலப்பறைகள் இப்படி ஒரு காதல் கிறுக்கனா? என்று அனைவரையும் வியப்படைய வைக்கும்.
ஸ்ருதிஹாசன் சைக்கிளில் செல்ல தனுஷ் பைக்கில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ருதிஹாசனை பின் தொடர்ந்து வருவார்.
' 3 ' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் என்ன பைக்கை பயன்படுத்தினார் என்பது சமூக வலைதளங்களில் தேடப்படும் ஒரு விஷயமாகும்.
