கால்நடைகள் ஆன மாடுகளுக்கு பிறக்கும் கன்று குட்டிகள் நான்கு கால்களுடன் பிறப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்!. ஆனால் மதுரையில் உள்ள ஒரு ஊரில் இரண்டு கால்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. பிறந்த கன்றுக்குட்டி எழுந்து நிற்கவும் செய்துள்ளது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது?
இரண்டு முன்னங்கால்கள் இல்லை. பின்னங்கால் கண்டு ஸ்டைலாக எழுந்து நின்று கொண்டிருக்கும் இந்த கன்றுக்குட்டி ஊனமுற்ற விலங்குகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

வழக்கம்போல விவசாயம் செய்து கொண்டிருந்த பன்னீர் செல்வத்திற்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது. அவரது மாட்டிற்கு பிறந்த கன்றுக்குட்டி இரண்டு கால்கள் தான் உள்ளது என்று.
கன்றுக்குட்டி பிழைக்குமா? என்று பயந்தபடி ஓடிச் சென்று பார்த்த பன்னீர்செல்வம் கன்றுக்குட்டி நலமாக இருப்பதை கண்டு ஆறுதல் அடைந்தார். பிறந்த உடனேயே அந்தக் கன்றுக்குட்டி முன்னங்கால்கள் இல்லாத நிலையில் பின்னங்கால் கொண்டு எழுந்து நிற்கவும் செய்துள்ளது. இதை பார்த்த அந்த கிராமத்து மக்கள் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
காணக்கிடைக்காத இந்த ஆச்சரியமான நிகழ்வை சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.