சிவாஜி கணேசன் ,சாவித்திரி நடிப்பில் வெளிவந்த பாசமலர் திரைப்படம் 90 கிட்ஸ் மனதில் ஒரு பாசப் போரை நடத்தி விட்டது. அதன் பிறகு அண்ணன் தங்கை பாசத்தை பற்றி விவரிக்கும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வந்தன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வேலாயுதம், திருப்பாச்சி, வேதாளம், தற்போது கூட வெளிவந்த நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை இந்த திரைப்படங்கள் பாசத்தை பொழிந்தன.
20 கிட்ஸ் அதிகமாக விரும்பி பார்க்கும் திரைப்படமாக நம்ம வீட்டு பிள்ளை மாறிவிட்டது. எந்த ஒரு எமோஷனல் காட்டுவதற்கும் நம்ம வீட்டு பிள்ளை பாடல் அதையே அனைவரும் பயன்படுத்துவார்கள்.


சூர்யா ஜோதிகா வின் 2D நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி கொண்டுவரும் சசிகுமார்,ஜோதிகா அண்ணன் தங்கையாக நடிப்பில் "உடன்பிறப்பே" திரைப்படம் ஏற்கனவே அதற்கான டீசர் வெளியிடப்பட்டது.
தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று ஆயுத பூஜை நன்னாளில் "உடன்பிறப்பே" திரைப்படம் அமேசன் பிரைம் வீடியோ OTT தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.