ஒரு வாட்ச் மனிதன் உயிரை காப்பாற்றியுள்ளதா? உங்கள் அனைவருக்கும் கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும் இருக்கும்.
ஆமாங்க! இது ஒரு உண்மை சம்பவம்! இந்த சம்பவம் எங்கே நடந்துள்ளது? எப்படி ஒரு வாட்ச் மனிதன் உயிரை காப்பாற்றியது? என்பதை பற்றி பார்ப்போம்.
சிங்கப்பூரில் உள்ள ஒரு நகரில் முகமது ஃபிட்ரி என்ற நபர் வாழ்ந்து வருகிறார். தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். வழக்கம் போல ஒரு நாள் முகமது ஃபிட்ரி நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது திடீரென்று எதிரே வந்த வாகனம் மோதியதில் முகமது ஃபிட்ரி தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த முகமது ஃபிட்ரியை காப்பாற்ற யாரும் அங்கு இல்லை. ஒரு ஆளாதரவற்ற பகுதியில் அவர் மாட்டிக்கொண்டதால் சுற்றி யாருமே இல்லை!
ஒருகட்டத்தில் சுயநினைவு இன்றி முகமது ஃபிட்ரி மயக்க நிலைக்கு சென்று விட்டார். உடனே அவரது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் தானாகவே அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் வர வைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் முகமது ஃபிட்ரி உயிரைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி மக்களுக்கு எல்லாம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
