தற்போது மிகப் பிரபலமாக அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு நூடுல்ஸ் ஆகும். இந்த நூடுல்சுக்கு பின்னால் மிகப் பெரிய கதையே இருக்கிறது.
முதன்முதலில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட நாடு சீனா ஆகும். சீனாவில் இருந்து பரவிய நூடுல்ஸ் உணவு முறை தற்போது அனைத்து நாடுகளுக்கும் வழக்கமாகிவிட்டது.
நூடுல்ஸ் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மேகி நூடுல்ஸ் வகைதான். அந்த அளவுக்கு மேகி நூடுல்ஸ் பிரபலமாகிவிட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக தற்போது மேகி நூடுல்ஸ் ஆகி விட்டது. 'மேகி மில்க் ஷேக்' என்று பால் கலந்து தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வகையும் மிகப் பிரபலமாகி விட்டது.
நூடுல்சை முள் கரண்டியால் குத்தி சாப்பிடும் பழக்கம் போய் தற்போது நூடுல்சை அப்படியே கையில் தொடாமல் ஒரு சினாக்ஸ் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு தற்போது வந்திருக்கும் மிளகாய் மேகி என்கிற உணவு வகையும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அது என்ன என்றால் பஜ்ஜி மிளகாய் எடுத்து அதனை சிறிது அறுத்து அதனுள் நூடுல்ஸ் வைத்து வேகவைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
மிளகாய் மேகியை சற்றும் எதிர்பார்க்காத உணவு பிரியர்கள் பெரும் ஆனந்தம் அடைந்துள்ளார்கள்.
