.

வங்கி பயனர்கள் மகிழ்ச்சி-ஆர்பிஐ அதிரடி!

 தற்போது ஆர்பிஐ புதிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

கிரெடிட் காட்டு மூலம் வங்கியில் கடன் வாங்கிய வங்கி பயனர்கள் மற்றும் வங்கியில் நேரடியாக விவசாய கடன் அல்லது வேறு ஏதேனும் காரணமாக கடன் வாங்கிய வாங்கி பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை செலுத்திவிட வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் பின்பற்றி வரும் ஒரு நடைமுறையாகும்.

 வங்கியில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுத்துக் கொள்ளும் AUTO DEBIT முறையை பின்பற்றி வந்தார்கள்.

இதனால் வங்கியில் கடன் வாங்கிய வங்கி பயனாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தார்கள். அடிக்கடி தனது வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதாக ஏகப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் தற்போது ஆர்பிஐ புதிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. 


இன்றிலிருந்து வங்கியில் கடன் வாங்கியுள்ள வங்கி பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கடனை செலுத்தாவிட்டால் அவர்கள் அனுமதியின்றி எடுக்கக்கூடாது. இதனை அனைத்து வங்கிகளும் கடை பிடிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதாவது, 

" அவர்கள் வங்கியில் வாங்கிய குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாவிட்டால் அல்லது செலுத்துவதற்கு தாமதமானால் அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விடவேண்டும்.அதன் பிறகு 24 மணி நேரத்திற்குள் அவர்கள் கடனை செலுத்தாவிட்டல் மட்டுமே அவர்கள் வங்கியில் பணம் எடுக்க வேண்டும் " 

என்று தெரிவித்துள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال