அதிக போதை தரும் மருந்து தயாரிப்பில் கஞ்சா செடி பயன்படுத்தப்படுகிறது. கஞ்சா செடிகள் வளர்ப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதையும் மீறி நிறைய பேர் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வருகிறார்கள்.
பொதுவாக மலையடிவாரத்தில் கஞ்சா செடி வளர்ப்பு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு தான் வருகிறது. இருந்தாலும் நம் மக்கள் திருந்துவதாக இல்லை.
இதேபோலத்தான் தமிழகத்தில் இன்னும் சம்பவம் நடந்துள்ளது. அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள மழைக்காடுகளில் கஞ்சா வளர்ப்பு நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சிவமூர்த்தி மற்றும் மகாதேவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளார்கள்.
திருட்டுத்தனமாக கஞ்சா செடி வளர்த்த இந்த இரண்டு புத்திசாலிகள் செய்த யோசனைதான் வேற லெவல்.
போலீசாரிடமிருந்து தப்பிக்க கஞ்சா செடியை மட்டும் தனியாக வளர்க்காமல் விவசாயம் செய்யும் வயலில் பயிர்களுக்கு மத்தியில் இடையில் என மறைத்து வளர்த்திருக்கிறார்கள்.
அந்த மலைவாசி கிராம மக்களுக்கு தெரியாத வகையில் இந்த திருட்டுத்தனமான வேலையை செய்திருக்கிறார்கள்.
எப்படியோ விஷயம் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரை கைது செய்தார்கள்.
இந்த நவீன காலத்தில் கண்டுபிடிப்பது கூட போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஏனென்றால் குற்றவாளிகள் அனைவரும் அறிவாளியாக இருக்கிறார்கள். தான் செய்யும் திருட்டு தனத்தை எப்படி எப்படியோ மறைத்து போலீசாருக்கு தண்ணீ காட்டுகிறார்கள்.
