விபத்து அல்லது ஏதாவது அவசரம் ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம்?
கண்டிப்பாக சொல்லிவிடலாம்.முதலில் அனைவரும் ஆம்புலன்ஸ்க்கு தான் கால் செய்வார்கள்.
இதுவே விமானத்தில் ஏதாவது விபத்து நடந்தால் என்ன செய்வது?
அட! அதற்குத்தானே விமானத்தில் முதலுதவி பொருள்கள் வைத்திருக்கிறாரகள். பிறகு எனன கவலை என்று நீங்கள் சொல்வீர்கள்.
எந்த முதலுதவிப் பொருட்கள் எல்லாம் ஒருசில சிறிய விபத்துக்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஏதாவது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டால் பயணிகள் அனைவரையும் எப்படி பாதுகாப்பாக வைப்பது?
இதற்காகத் தான் தமிழக அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் அதாவது பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயணிகளை பாதுகாக்கலாம்'என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
2019 நவம்பர் மாதம் முதல் இயக்கப்படாமல் இருந்த அரசுமுறை பயணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களை இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு பயன்படுத்த போவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மருந்து பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர்களை தரை இறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த விமான ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
