.

ஜோதிகாவின் வளர்ச்சியைக் கண்டு பிரமிக்கும் சூர்யா!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜோதிகா. சினிமாவுக்கு வந்து 25 வருடங்களுக்கு  மேல் அனுபவம் வாய்ந்த நடிகை . விஜய்,அஜித்,ரஜினி,சிம்பு,சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் பக்கம் ஈர்த்தவர்.



நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா அதன் பிறகு திரைப்படங்களில் நடிகை வேடத்தில் நடிப்பது இல்லை. அதற்கு மாறாக குணச்சித்திர வேடத்திலும் மாறுபட்ட கேரக்டரிலும் நடிக்கத் தொடங்கினார். உதாரணமாக ஜாக்பாட், ராட்சசி, பொன்மகள் வந்தாள், போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பார். அதன்பிறகு தற்போது கூட வெளிவந்த உடன்பிறப்பே திரைப்படத்தில் தங்கை வேடத்தில் அருமையாக நடித்திருப்பார்.

உடன்பிறப்பே திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் ஜோதிகாவுடன் வந்திருந்த நடிகர் சூர்யா தன் மனைவியை பற்றி 

" ஜோதிகாவை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வேறு ஒரு ஊரிலிருந்து வந்து இந்த ஊரில் தமிழ் கற்று, இங்கு இருக்கும் மக்களை தன்னுடையதாக ஆக்கி,திரையுலகிற்கு அறிமுகமாகி, ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்யும்போது புரிதலோடு நல்ல திரைப்படத்தை தேர்வு செய்து அதைக் கேட்டது போல் நடித்து வரும் இவரை நான் இன்னமும் ஆச்சரியத்துடன் தான் பார்த்துக் கொண்டு வருகிறேன்" 

என்று நடிகர் சூர்யா ஜோதிகாவின் 50ஆவது திரைப்பட வெளியீட்டு விழாவில் பெருமையுடன்  கூறியுள்ளார்.

Previous Post Next Post

نموذج الاتصال