தற்போது இருக்கும் சூழ்நிலையில் வீட்டுக்குள்ளே ஒரு நாள் முழுவதும் இருப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆனால் இதற்கெல்லாம் முன்பே சுமார் 17 வருடம் காருக்குள்ளே வாழ்ந்த முதியவர் ஒருவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டில் வாழ்ந்து வருபவர் சந்திரசேகர். இவர் ஏன் காட்டில் வாழ்ந்து வருகிறார்? அதுவும் காருக்குள்ளே வாழ்ந்து வருகிறார்? இதைப்பற்றியெல்லாம் அறிந்துகொள்ள செய்தியாளர்கள் நேரில் சென்றார்கள்.
தனது அம்பாசிடர் கார் ஒன்றை மட்டும் காட்டில் நிறுத்தி அதனுள் தனது துணிமணிகளை வைத்து காட்டில் கிடைக்கும் பழங்கள் மற்றும் கிழங்குகளை மட்டும் சாப்பிட்டு 17 வருடம் வாழ்ந்திருக்கிறார்.
அதைப்பற்றி தகவலறிந்த செய்தியாளர்கள் அவரை நேரில் சென்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
வங்கியில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு இரக்கிறார் சந்திரசேகர். ஒருகட்டத்தில் அவரது கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் அவரது சொத்துக்களை ஜப்தி செய்துவிட்டார்கள்.
அவருடைய வீட்டைக் கூட கடன் பாக்கியால் பிடிங்கி விட்டார்கள். மிஞ்சி இருந்தது அவருடைய ஒரு அம்பாசிடர் கார் மட்டும்தான். எனவே வாழ்வதற்காக இந்த காட்டிற்கு வந்து தனது காருக்குள்ளே வீட்டை போல் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார்.
சொந்த பந்தம் யாருமே உதவி செய்யாத வாழ்க்கையை வெறுத்து விட்டு தனியாக நிம்மதியாக அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்து வருகிறார் சந்திரசேகர்.