.

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட துணி சோப்பு!

இன்றைய நவீன உலகில் அனைவரும் கடைகளில் நேரடியாக பொருள் வாங்குவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் மொபைலில் இருந்து பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் பல நன்மைகளும் பல மோசடிகள் நடந்து வருகிறது.

வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுவதால் பலபேர் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகத்தில் ஏகப்பட்ட பித்தலாட்டங்களை மோசடிகளும் நடந்து வருகிறது.இதேபோலத்தான் மோசடி சம்பவம் ஒன்று மும்பையில் நடந்து உள்ளது.


மும்பையை சேர்ந்தவர் சிம்ரன்பால் சிங். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட்டில் நிறைய ஆஃபரில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஒன்று வெறும் 53 ஆயிரம் ரூபாய்க்கு ஆஃபர் ஒன்றை பிளிப்கார்ட்டில் இவர் பார்த்துள்ளார். எனவே இவ்வளவு குறைவான விலையில் ஐபோன் கிடைப்பதால் வாங்கி வடலாம் என நினைத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஐபோனை ஆர்டர் செய்துள்ளார்.

ஐபோனுக்கான தொகையை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விட்டார். ஆர்டர் செய்து இரண்டு நாட்களுக்குள் அவரது வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்தது. ஐபோன் கிடைத்துவிட்ட ஆர்வத்தில் அதை பிரித்து பார்த்துள்ளார்.

பார்சலில் உள்ளே ஐபோனுக்கு பதில் இரண்டு துணி சோப்பு கட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாந்து விட்டோமோ என நினைத்து பதறிப் போனார். உடனடியாக காவல் நிலையத்தில் தான் ஏமாந்து விட்டதை கூறி புகார் அளித்தார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு   கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் அளித்து, பிறகு முழு பணத்தையும் பெற்று விட்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post

نموذج الاتصال