நன்றி விசுவாசம் உள்ள ஒரே ஜீவன் என்றால் அது நாய் தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அதே நாய்க்கு வெறி பிடித்து விட்டால் வளர்த்தவர் என்ன? யாராக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை.
நாம் ஜெயம் ரவியின் மிருதன் திரைப்படத்தை பார்த்திருப்போம். அதேபோலவே வெறிநாய் ஒன்று மக்களை வெறித்தனமாக கடிக்க ஆரம்பித்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட மக்கள் சுற்றி வளைத்து அடித்ததில் நாய் இறந்து விட்டது.
எங்கே நடந்திருக்கிறது இந்த சம்பவம்!
ஒரு வெறிநாய் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் சுற்றி வந்துள்ளது. ஆரம்பத்தில் எல்லோரும் ஏதோ தெரு நாய் என்று நினைத்து அசால்டாக இருந்துள்ளார்கள்.
பிறகு சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களை வெறித்தனமாக கடிக்க ஆரம்பித்துள்ளது. சின்ன சின்ன குழந்தைகள் பெரியவர்கள் என யாரையும் பார்க்காமல் வெறித்தனமாக கண்களில் பட்டவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது.
சுமார் ஒரு மணி நேரத்தில் நாற்பத்தி ஏழு பேரை கடித்து குதறி இருக்கிறது வெறிநாய். அதிர்ச்சி அடைந்த மக்கள் பிறகு உஷார் ஆகி விட்டார்கள். அந்த நாயை சுற்றிவளைத்து அடிக்க ஆரம்பித்தார்கள். பலமான தாக்குதலில் அந்த நாய் இறந்து விட்டது.