.

காலாண்டு,அரையாண்டு கிடையாது! நேரடி பொதுத்தேர்வு!

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு! நடப்பாண்டு 2021 ஆம் ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

2020ஆம் ஆண்டு உருவான கொரோனா பெருந்தொற்று இன்னும் நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொரோனாவால் ஏகப்பட்ட உயிர்கள் பறிபோய் விட்டன. கோடிக்கணக்கான பேர் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டு தவணைகளாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.




 சுமார் ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலமே தேர்வுகள் அனைத்தும் வைக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன .

தற்போது தான் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே வரும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் வந்து விட்டதால் இன்னும் காலாண்டு தேர்வுகள் வைக்கப்படாமல் இருப்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 " 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு 2021 ஆம் ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது! நேரடியாக பொதுத்தேர்வு நடைபெறும். 
ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்களும் பொது தேர்வுக்கு தயாராக வேண்டும். மாணவர்கள் மெத்தனமாக இருக்க கூடாது.
 ஏனென்றால் இந்த முறை பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறாது! நேரடியாக தேர்வு மையங்களில் தான் பழையபடி நடைபெறும். "

 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

Previous Post Next Post

نموذج الاتصال