இப்பொழுது எல்லாம் ஊர் பகுதியில் சிறுத்தைகள் வருவது சாதாரணம். அதேபோலதான் மும்பையில் உள்ள ஒரு வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து தங்கியுள்ளது.
வீட்டுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக அந்த வீட்டு பெண்மணி ஒருவர் இருந்திருக்கிறார். அவர் சாதாரணமாக தனது வீட்டில் இருப்பது போல சோர்வாக அமர்ந்து இருக்கிறார்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்👇
அப்போது வீட்டின் மூட்டைக்கு பின்னால் பதுங்கியிருக்கும் சிறுத்தை அந்த பெண்மணியை பார்த்து விட்டது. அந்த பெண்மணியை தாக்குவதற்காக சிறுத்தை மெல்ல மெல்ல பதுங்கி அவரின் அருகே வந்துள்ளது.
திடீரென்று தன் அருகே ஏதோ வருவதை உணர்ந்த அந்தப் பெண்மணி சற்று ஜாக்கிரதையுடன் அந்த சிறுத்தையை பார்த்துவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் சிறுத்தையை தன் கையால் அடித்து விரட்ட முயற்சி செய்திருக்கிறார்.
சிறுத்தை அவரைப் தாக்கி எழுந்து போக விடாமல் கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்து பெண்மணி என்ன செய்வது என்று தெரியவில்லை .எப்படி தப்பிப்பது என்றும் புரியவில்லை. உடனே தன் அருகே வைத்திருந்த கைதடி எடுத்து சிறுத்தையை ஓங்கி அடித்து இருக்கிறார். சிறுத்தை பயந்து ஓடிவிட்டது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்மணியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்கள். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் அந்தப் பெண்மணி உயிர் தப்பியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
