நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபரா?
நீங்கள் வைத்திருக்கும் யூடியூப் சேனலை மற்றவர்களுக்கு ஷேர் செய்திருப்பீர்கள்!! அப்படி நீங்கள் ஷேர் செய்யும் உங்கள் யூடியூப் சேனல் லிங்க பார்க்க கண்ணா பின்னா என்று இருக்கும்.
நமக்கு பிடித்த மாதிரி எப்படி நம்ம யூடியூப் சேனல் லிங்கை மாற்றுவது?
நீங்கள் உங்க யூடியூப் சேனல் லோட லிங்கை உங்களுக்கு பிடித்தது போல் மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அவற்றை வரிசையாக கீழே காணலாம்.
* முதலில் நீங்கள் 100 subscribers மேல் தாண்டி இருக்க வேண்டும்.
* அடுத்ததாக நீங்கள் ஒரு நல்ல logo வை உங்கள் யூடியூப் சேனலுக்கு வைத்திருக்க வேண்டும்.
*அடுத்ததாக உங்கள் யூடியூப் சேனலில் ஒரு சிறந்த யூட்யூப் பேனர் வைத்திருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூன்று வேலைகளை மட்டும் நீங்கள் முடித்திருந்தால் ஈசியாக உங்கள் யூடியூப் சேனல் லிங்கை உங்களுக்கு பிடித்ததுபோல் மாற்றிவிட முடியும்.
இவை மூன்றையும் நீங்கள் முடித்து விட்டீர்கள் என்றால் இப்போது உங்கள் கூகுள் குரோம் இல் யூடியூப் பக்கத்திற்கு செல்லுங்கள்.
நீங்கள் மொபைலில் யூடியூப் ஓபன் செய்து வைத்துள்ளீர்கள் என்றால் desktop mode க்கு மாற்றி வைத்திருங்கள். இப்பொழுது your channel என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து customize your channel என்கிற ஆப்ஷனில் செல்க.
இங்கே YouTube studio dashboard கு செல்வீர்கள். அதில் மேலே இருக்கும் மூன்று ஆப்ஷன்களில் மூன்றாவதாக இருக்கும் ஆப்ஷனில் செல்லுங்கள்.
கீழே வந்தீர்கள் என்றால் அங்கே custom url என்று இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் யூடியூப் சேனலில் பெயரில் url மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு சில letters, numbers சேர்த்து உங்களுக்கு பிடித்தது போல் மாற்றிக் கொள்ளலாம்.
