.

JIO SIM-Caller tune வைப்பது எப்படி?

 உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஜியோ சிம் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் மொபைலுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் நமக்கு கால் செய்பவர் கேட்கவேண்டிய ரிங்டோன் வைப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.


நீங்கள் ஜியோ சிம் உபயோகிக்கிறீர்கள் என்றால் கீழே சொல்லப்படும் விஷயங்களை பின்பற்றுங்கள்!

Application download link :



நீங்கள் முதலில் play Store க்கு செல்லுங்கள். அங்கே my jio என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்த பிறகு அந்த அப்ளிகேஷன் உள் செல்லுங்கள்.

 உங்களுடைய ஜியோ மொபைல் நம்பரை பதிவு செய்து லாகின் செய்யுங்கள். உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். பிறகு உள்ளே செல்லுங்கள்.

இப்பொழுது உங்கள் my jioஅப்ளிகேஷனில் மேலே நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். அதில் Jio savvarn என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இதில் பலமொழிகளில் லட்சக்கணக்கான பாடல்கள் இருக்கும். தற்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பாடல்கள் இருக்கும். அதனை நாம்  உங்களுக்குப் பிடித்த மொழியில் மாற்ற வேண்டும். அதற்குக் கீழே வாருங்கள். பிறகு  select language என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த மொழியில் மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எந்த பாடல் வேண்டுமோ அந்த பாடலை மேலே search செய்து அந்த பாடலை ஒரு முறை play செய்து பார்த்துக்கொள்க. பிறகு அந்தப் பாடலுக்கு நேராக ஒரு மூன்று புள்ளிகள் இருக்கும் .அதனை கிளிக் செய்து கொள்க. இப்போது உங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் வரும் அதில் set as ringtone என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து கன்ஃபார்ம் செய்து கொள்க.

இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும். ஜியோ நிறுவனமிடமிருந்து  உங்களுடைய jio caller tune மாற்றி விட்டோம் என்பது போல் ஒரு மெசேஜ் வந்திருக்கும்.

Previous Post Next Post

نموذج الاتصال