.

ஆண்ட்ராய்ட் மொபைலை டிவி ரிமோட் ஆக பயன்படுத்தலாம்!

 உங்களிடம் டிவி ரிமோட் இல்லையா? அல்லது டிவி ரிமோட் தொலைந்து விட்டதா?

 பரவாயில்லை. நீங்கள் உங்கள் மொபைலையே டிவி ரிமோட் ஆக பயன்படுத்தலாம். ஆமாங்க உண்மைதான். நீங்கள் எந்த கம்பெனி மொபைல் பயன்படுத்தி வந்தாலும் mi remote என்கிற டிவி ரிமோட் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். நீங்கள் பிளே ஸ்டோர் க்கு செல்லுங்கள். அங்கே mi remote என்று டைப் செய்யுங்கள். 

இப்பொழுது உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் வரும் அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். நீங்கள் ரெட்மி மொபைல் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் உங்கள் மொபைலில் ஏற்கனவே default ஆக இந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எந்த கம்பெனி டிவி குடையை பயன்படுத்தினாலும் உங்களுக்கு தேவையான எல்லா ரிமோட் டும் இந்த அப்ளிகேஷனில் இருக்கும்.

அதுதான் இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரு சிறப்பு பண்பாகும்.உதாரணமாக சன் டைரக்ட், வீடியோகான் மற்றும் பல டிவி நெட்வொர்க்குகள் உள்ளன.



நீங்கள் எந்த நெட்வொர்க் உடன் தொடர்புடைய டிவி குடையை பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றது போல இங்கே பல நெட்வொர்க்குகள் சார்ந்த ரிமோட்கள்  இருக்கும்.

உதாரணமாக நீங்கள் சன் டைரக்ட் டிவி ரிமோட் செலக்ட் செய்து உள்ளே சென்றாள் உங்களுக்கு தனியாக ஒரு அப்ளிகேஷன் சன் டைரக்ட் ரிமோட் என்ற பெயரில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆகியிருக்கும்.

 நீங்கள் நேரடியாகவே சன் டைரக்ட் ரிமோட் அப்ளிகேஷனை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் உண்மையான சன் டைரக்ட் ரிமோட் டில் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ அத்தனையும் இந்த மாடர்ன் ரிமோட்டில் இருக்கும். அச்சு அசலாக சன் டைரக்ட் ரிமோட் ஐ பயன்படுத்தியது போலவே இருக்கும். சன் டைரக்ட் மட்டுமல்ல. இன்னும் பல ரிமோட் களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال