உங்கள் மொபைலுக்கு அடிக்கடி மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கிறதா?
உங்கள் மொபைலில் அடிக்கடி மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கும். நமக்கு ரொம்ப கடுப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான மெசேஜ் களும் நமக்கு வரும். மெசேஜ்கள் வந்து குவிந்து நமது மொபைல் ஸ்டோரேஜையே நிரப்பி விடும்.
நாம் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் மெசேஜ் களும் நம் மொபைலுக்கு வரும். நாம் நம் மொபைலில் பதிவேற்றி வைத்திருக்கும் அப்ளிகேஷன் களிலிருந்து மெசேஜ்கள் வந்து குவியும்.
இது மட்டுமில்லாமல் நமது மொபைல் காண்டாக்ட் இல் உள்ள நபர்களிடம் இருந்தும் மெசேஜ்கள் ஏராளமாக வந்து குவியும்.
ஒருகட்டத்தில் நமது மொபைலில் குவிந்து கொண்டிருக்கும் மெசேஜ்களை அழிக்கலாம் என்று நினைத்து மெசேஜ்களை அழித்தால் அதில் முக்கியமான மெசேஜ் களும் இருக்கும். தெரியாமல் அந்த மெசேஜை அழித்துவிட்டால் நாம் அதற்காக வருத்தப்பட வேண்டி இருக்கும். இதுபோல பல பிரச்சினைகள் உள்ளன.
இதையும் படிக்க : நமது கூகுள் அக்கவுண்ட் மற்றும் யூடியூப் சேனலை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது?
உங்கள் எல்லாரும் மொபைலிலும் மெசஞ்சர் என்கிற அப்ளிகேஷன் இருக்கும். சிறிய பட்டன் மொபைலில் இருந்து பெரிய ஆண்ட்ராய்டு, ஐபோன் முதலிய எல்லா மொபைலிலும் மெசஞ்சர் அப்ளிகேஷனில் கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் அதில் தான் நாம் நமது மொபைலுக்கு வரும் மெசேஜ்களை பார்க்க முடியும்.
இப்பொழுது நாம் ஆண்ட்ராய்டு மொபைலில் வரும் மெசேஜ்களை எப்படி ஆர்டராக வைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
< நீங்கள் முதலில் உங்கள் மொபைலில் மெசஞ்சர் அப்ளிகேஷனில் செல்க.
< பிறகு மேலே செட்டிங்ஸ் மாதிரி ஒரு ஐகான் இருக்கும். அந்த ஐகானை அழுத்தி உள்ளே செல்லுங்கள்.
< பிறகு உங்களுக்கு கீழே group messages automatically என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனை மட்டும் நீங்கள் ஆன் செய்து வைத்தால் மட்டும் போதும்.
< பிறகு வெளியே வாருங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு கூடுதலாக மூன்று ஆப்ஷன்கள் ஓபன் ஆகி இருக்கும்.
< அதில் முதலில் உள்ள மெஸேஜஸ் என்கிற பகுதியில் உங்கள் காண்டாக்ட் இல் உள்ள நபர்கள் அனுப்பிவிடும் மெசேஜ்கள் எல்லாம் ஒன்றாக வரும்.
< அடுத்ததாக உள்ள பிரமோஷன் என்கிற பகுதியில் உங்கள் மொபைலில் பதிவேற்றி வைத்து இருக்கும் அப்ளிகேஷன்கள் இடம் இருந்து வரும் மெசேஜ் எல்லாம் ஒன்றாக வந்து குவியும்.
< மூன்றாவதாக உள்ள பைனான்ஸ் என்கிற பகுதியில் நீங்கள் ஆன்லைன் மூலம் செய்யும் பண பரிவர்த்தனைகள் பற்றிய மெசேஜ்கள் எல்லாம் ஒன்றாக வந்து குவியும்.
இதையும் படிக்க : Telegram channel ஓபன் செய்வது எப்படி?
மேலே கூறியவாறு மட்டும் செய்தால் போதும் உங்கள் மொபைலில் வரும் மெசேஜ்களை எல்லாம் ஒரு வரிசையாக நீங்கள் வைத்திருக்க முடியும்.
