google account and youtube channel 2 step verification enable செய்வது எப்படி!
உங்கள் google account and youtube channel இல் சரியான பாதுகாப்பு இல்லை என்றால் அது மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படலாம். இந்த பதிவில் நமது google account (or) email , YouTube channel இல் எப்படி பாதுகாப்பாக வைப்பது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
நீங்கள் பாதுகாப்பாக வைக்க வில்லை என்றால் உங்களது google account or email ஹேக் செய்யப்படலாம். இதனால் google account உடன் தொடர்பில் உள்ள YouTube channel உம் ஹேக் செய்யப்படலாம். இதனால் உங்கள் YouTube channel முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். பிறகு அவர்கள் நமது சேனலை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அவர்கள் நமது சேனலின் பெயரை மாற்றுவார்கள். பிறகு சேனல் லோகோவை மாற்றுவார்கள். பிறகு தேவையில்லாத வீடியோக்களை நமது சேனலில் பதிவு ஏற்றுவார்கள். அவர்கள் பதிவேற்றம் வீடியோக்கள் அனைத்தும் யூடியூப் விதிமுறைகளை மீறியே பதிவு ஏற்றுவார்கள்.
இதனால் நமது சேனலின் முழு கட்டுப்பாடும் அவர்கள் பெற்று என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். திரும்பவும் நமது சேனலை மீட்பது பெரும் சிரமமாக போய்விடும். எனவே அதற்கு நாம் கட்டாயம் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
அதற்கு கூகுள் கொண்டுவந்துள்ள ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை 2 - step verification enable செய்வது. இது ஒன்று மட்டும் தான் பாதுகாப்பா? இது மட்டும் இருந்தால் நமது account ஐ பாதுகாத்து விட முடியுமா ? என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும் நமது google account ஐ பாதுகாப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறைதான்.
முதலில் நீங்கள் உங்கள் இமெயில் அக்கவுண்டுக்கு செல்லுங்கள். பிறகு இமெயில் புரபைல் பிக்சர் ஐ கிளிக் செய்து manage your google account என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். பிறகு மேலே நிறைய ஆப்ஷன்கள் இருக்கும் அதில் security என்கிற ஆப்ஷனை கிளிக் செய்க.
பிறகு அப்படியே கீழே வந்தால்
2 - step verification என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும். அது ஆப் செய்யப்பட்டு இருக்கும் அதனை நாம் ஆன் செய்ய வேண்டும். இப்பொழுது அந்த ஆப்ஷனை க்ளிக் செய்க. பிறகு உங்கள் இமெயில் அக்கவுண்ட் உடன் கொடுக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டு என்டர் செய்ய வேண்டும். பிறகு next என்கிற ஆப்ஷனை கிளக் செய்க.
அதன்பிறகு உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்
பிறகு send என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்க. அதை கிளிக் செய்தால் உங்கள் மொபைலுக்கு ஒரு otp வரும். அதனை என்டர் செய்து பிறகு next என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்க.
இப்பொழுது உங்களுக்கு 2 step verification enable செய்கின்ற பக்கத்திற்கு செல்வீர்கள். அதில் 2 step verification ஆப் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் turn on செய்யுங்கள். அவ்வளவு தான் நண்பர்களே! நாம வெற்றிகரமா நம்மளுடைய google account ஐ security செய்துவிட்டோம்.
Tags
android tricks
