நடிகர் விஷால் கடந்த இருபத்தி ஒன்பது ஆகஸ்ட் 2021 அன்று தனது 44-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு பிரியாணி வழங்கி அவர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் நேரில் சென்று சுவையான பிரியாணி சமைத்து அதனை தன் கையால் அவர்களுக்கு பரிமாறினார். அவருடன் இணைந்து அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.
பின்னர் தனது பிறந்த நாளுக்கான கேக்கை அந்த இல்லத்திலேயே வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த செய்தியை தெரிந்துகொண்ட செய்தி பிரிவினர் திரண்டு வந்து நடிகர் விஷாலை வினவினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் விஷால் " இந்த குறுகிய காலத்தில் நிறைய நாடக கலைஞர்கள் சுமார் 250 பேருக்கு மேல் பலியாகி அவர்களுக்காக அவர்கள் குடும்பத்திற்காக தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஆனால் என்னால் தற்போதைய சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனால் இனிமேல் உதவி என்று தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்வோருக்கு தான் முன்வந்து உதவுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் உயிரிழந்த நாடக கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியவில்லையே ! " என்று நினைத்து வருந்துவதாக தெரிவித்தார்.
அந்த இல்லத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் நடிகர் விஷாலுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.



