தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் 2020 க்கு முன்பு எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. இந்த 2021 ஆம் ஆண்டில் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இதற்கு முன்பெல்லாம் ஒரு சில படங்களில் வில்லன்களுக்கு எடுபிடி வேலை செய்யும் அடியாளாக நடித்திருந்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.
தர்மபிரபு, ஜாம்பி, மண்டேலா, கூர்கா மற்றும் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமன்றி எந்த கதாபாத்திரம் கிடைக்கிறதோ அந்த கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இதை படிக்க: தன் கணவருக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பிவட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!
தற்போது" பேய் மாமா" என்கிற திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, சிங்கம் புலி மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் இணைந்து ஒரு காமெடி கலந்த திகில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.



