மக்களின் துயரங்களை எடுத்துரைக்கும் படம் "ஜெய் பீம்"
சூர்யாவின் "சூரரைப்போற்று " படத்திற்கு பிறகு அடுத்து என்ன படமாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு நெட்ப்ளிக்ஸ் வழங்கும் "நவரசா" என்னும் வெப் சீரியலில் நடித்திருந்தார்.
"நவரசா" என்னும் வெப் சீரியலில் சூர்யா மட்டுமன்றி விஜய் சேதுபதி ,யோகி பாபு, சித்தார்த் ,அரவிந்த்சாமி ,பிரகாஷ்ராஜ் மற்றும் பல சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா "ஜெய்பீம் " என்ற தனது அடுத்த படத்திற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு வக்கீல் கேரக்டரில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் படத்தின் போஸ்ட்டரிலே நடிகர் சூர்யா கருப்பு கோட்டு அணிந்து வக்கீல் தோற்றத்தில் மிடுக்காக காணப்படுகிறார். அடுத்தடுத்த போஸ்டர்களில் ஏழை மக்களின் துயரங்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக ஜெய் பீம் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சூர்யா நடிக்கும் அனைத்து திரைப்படமும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். தற்போது சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று எண்ணம் திரைப்படத்திலும் வசதியில்லாத,ஏழை மக்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்று போராடி அவர் நினைத்தபடியே விமானத்தில் பறக்க வைத்து பெருமைப்படுவார்.
Tags
Cinema

