.

தனது கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடினார் தன் மனைவி நயன்தாராவுடன்... 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கும் இடையே காதல் உருவாகி பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.



செப்டம்பர் 18 இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களே பிறந்தநாளையோட்டி நயன்தாரா அவர்கள் கேக் வெட்டி விக்னேஷ் சிவன் அவர்களின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் நயன்தாரா பதிவேற்றி வருகிறார்.

 விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "நெற்றிக்கண் "திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா ஒரு பார்வை தெரியாத போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். 

கடைசி வரைக்கும் பார்வை தெரியாமலேயே பல பெண்களை கடத்தும் குற்றவாளியை பிடிப்பதற்கு போலீஸாருக்கு உதவி செய்து, கடைசியில் அவரே அந்த கொலைகாரனை கொன்றும் இருப்பார். படம் நல்ல முறையில் விக்னேஷ் சிவன் எதிர்பார்த்ததைவிட வெற்றி பெற்றது.

 

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் தனது பயணத்தை தொடர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் நடிகனாக sivi ,poda podi முதலில்  படங்களில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். வேலையில்லா பட்டதாரி படத்தில் விக்னேஷ் என்ற பெயரில் ஒரு சிறிய வேடத்தில் வைத்திருப்பார். 

அதன் பிறகு தொடர்ந்து இயக்குனராக பணியாற்றி வருகிறார். உதாரணமாக நானும் ரவுடி தான் ,தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள்  போன்ற படங்களை அவரே கதை எழுதி அவரே இயக்கியுள்ளார். இதேபோல காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டு வருகிறது

தயாரிப்பாளராக எடுத்த திரைப்படங்கள் சமீபத்தில் வந்த நயன்தாராவின் "நெற்றிக்கண்" என்ற திரைப்படமாகும். அதன் பிறகு கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்திருக்கிறார்.

Previous Post Next Post

نموذج الاتصال