'விஜய் சேதுபதி நடிப்பில் "முகிழ்"திரைப்படம் செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியிடப்படும்' என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. அதன் பிறகு வந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில்' நானும் ரவுடிதான் 'என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதன் பிறகு பல படங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாது குணச்சித்திர வேடங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் சிறப்பாக நடிக்கக் கூடியவர் விஜய்சேதுபதி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட ' திரைப்படத்தில் ஒரு வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து பிரபலமானார். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வில்லன் பவானி என்கிற கேரக்டரில் நடித்த பிறகுதான் பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். முன்பு எல்லாம் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவேதான் இருந்தது. வருடத்திற்கு 3 படம், 4 படம் என்றுதான் நடித்தார்.தற்போது அவருடைய மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று சன் டிவியில் மாலை ஆறு முப்பது மணிக்கு முதன்முதலாக வெளியான' துக்ளக் தர்பார்' என்ற திரைப்படம் வெளியானது.
'துக்ளக் தர்பார்' திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ஓய்வதற்குள் அடுத்ததாக 'லாபம்' என்கிற திரைப்படத்தை ஓட்டி தளத்தில் வெளியிடப்பட்டது.
'லாபம்' திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலே மறுபடியும் ஓட்டிட்டு தளத்தில் 'அனபெல சேதுபதி' என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபலங்கள் நிறைய பேர் நடித்த படம் நன்றாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது 'அனபெல சேதுபதி' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலே மறுபடியும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. செப்டம்பர் 21 மாலை ஆறு முப்பது மணிக்கு ஓட்டிட்டு தளத்தில் "முகிழ்" என்ற திரைப்படம் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு விஜய்சேதுபதியே அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திரைப்படத்துக்கு மேல் திரைப்படம் என விஜய் சேதுபதி அவருடைய ரசிகர்களுக்கு இன்ப விருந்து கொடுத்து வருகிறார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் எந்த திரைப்படத்தைப் பார்ப்பது எந்த திரைப்படத்தை விடுவது என திக்குமுக்காடி வருகிறார்கள்.
Tags
Cinema

