.

"அரண்மனை 3 " படத்தில் ஆர்யா

"அரண்மனை 3" படத்தில்-ஆர்யாவை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி . அக்டோபர் 14 முதல் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


 சுந்தர்.சி இயக்கிய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகராக இருந்து பிறகு இயக்குனராக மாறிய நடிகர் தான் சுந்தர் சி அவர்கள். நடிகராக நடித்ததை விட இயக்குனராக மாறிய பிறகுதான் பல வெற்றித் திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் வந்ததுதான் அரண்மனை மற்றும் கலகலப்பு ஆகிய திரைப்படங்கள். இரண்டு படங்களிலுமே காமெடிகள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டாலும் திகில் கலந்த காமெடி திரைப்படமாக அரண்மனை பெற்றது.


* அரண்மனை-1 திரைப்படத்தில் நடிகர் வினய் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி , கௌரவ வேடத்தில் நடிகர் சுந்தர்.சி-யும் கோவை சரளா, மனோபாலா, சந்தானம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் சேர்ந்து திகில் கலந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பார்கள்.

 சந்தானத்தின் கலக்கல் காமெடி, சுந்தர் சி -ன் திகில் கலந்த நடிப்பு ஆகியவற்றால் "அரண்மனை" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

* அரண்மனை 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும், நடிகர் வைபவ்,  அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி, கௌரவ வேடத்தில் சுந்தர்.சி கோவை சரளா மனோபாலா சூரி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் திகில் கலந்த வெற்றியை பெற்றது. சூரியின் அசத்தலான காமெடி திரையரங்குகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.


சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகரையும் ஒரு புதிய காமெடி நடிகரை அறிமுகப்படுத்துவது வழக்கம்.அதன்படி,

  * அரண்மனை-3 படத்தில் கதாநாயகனாக ஆர்யாவும் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா ,கோவை சரளா, மனோபாலா காமெடி கதாபாத்திரங்கள் விவேக், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். 

நடிகர் விவேக் அவர்களின் கடைசி திரைப்படமான அரண்மனை 3 படத்தைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.இந்தத் திரைப்படமும் அரண்மனை 1, அரண்மனை 2 திரைப்படங்களைப் போல மக்கள் மத்தியில் ரொம்பவே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பல நாள் பல்வேறு குழப்பங்களில் இருக்கும் மக்கள் சந்தோஷமாக குடும்பத்தோடு ஒரு திகில் கலந்த காமெடி திரைப்படத்தை பார்க்க தயாராகி வருகிறார்கள்...
Previous Post Next Post

نموذج الاتصال