அவர் நடிப்பில் வெளிவந்த விஜய்யுடன் கத்தி, ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யாவுடன் டெடி, சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 மற்றும் பல தமிழ் திரைப்படங்களில் அவர் பிரபலமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் ரெமோ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த படங்களையெல்லாம் நடிகர் சதீஷ் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் சந்தானம் யோகிபாபு வடிவேலு மற்றும் பல காமெடி நடிகர்கள் காமெடியில் இருந்து நடிகர்களாக தனது பயணத்தை தொடங்கி உள்ளார்கள். அதேபோல நடிகர் சதீஷும் தற்போது அவரே நடித்து ஒரு படத்தை வெளியிட இருக்கிறார்.
அதன் பிறகு தற்போது புதியதாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.AGS கல்பாத்தி அகோரம் இயக்கத்தில் ROCKSTAR அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையில் வர இருப்பதால் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
அந்த திரைப்படத்திற்கு" நாய் சேகர்" என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் வடிவேலு நடிக்க இருக்கும் படத்திற்கு "நாய் சேகர்" என பெயர் வைக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டனர்.
பல சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிகர் வடிவேலுவின் திரைப்படமான நாய் சேகர் திரைப்படம் எடுக்க முடியாமல் போனது. தற்போது அந்த படம் எடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நடிகர் சதீஷ் திரைப்படத்திற்கு அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து வடிவேலுவின் அடுத்த படத்திற்கு வேறு பெயர் வைக்கலாம் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
