நீட் தேர்வு பற்றிய அச்சத்தால் சேலத்தை அடுத்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். முதலமைச்சர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இனிமேல் நம்மால் எப்படி வெற்றி பெற முடியும் என அவருக்கு நம்பிக்கையே போய் விட்டது. இதன் காரணமாக தனுஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் ஏற்கனவே அனிதா என்ற மாணவி இறந்தது நமக்கு தெரியும். அதற்குப் பிறகு மீண்டும் இதுபோல் துயரமான சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாணவரின் இறப்பு செய்தியை கேட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
மாணவர் தனுஷ் மரணத்திற்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக நமது சட்ட போராட்டம் இப்போது துவங்குகிறது.
நீட் தேர்வு காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து மிகுந்த துன்பமும் மனவேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி அவருக்கும் அவரது பெற்றோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் சிரமங்களை புரிந்துகொள்ளாத ஒன்றிய அரசின் பிடிவாதமும்,அலட்சியமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை வரவழைக்கிறது.
நீட் தேர்வில் முறைகேடு, கேள்விதாள் லீக் ஆள் மாறாட்டம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு மனதை மாற்ற வில்லை என்பது கல்வி வரலாற்றில் முதலில் வரவேண்டும் என்னும் அவசியத்தை மேலும் மேலும் வலுப்படுத்துகிறது.
இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிரந்து நீட் தேர்வுக்கான சட்டப் போராட்டம் இப்போது இருந்து துவங்குகிறது. நாளை தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான முழுமையான விலக்கு மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆதரவைத் திரட்டி இந்த போராட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்!!
என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முற்றிலும் விலக்கு கிடைத்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி மக்களுக்கு வேறு ஏதும் இல்லை.
