நடிகர் விஷால் தனது 42வது பிறந்தநாளை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அதன் பிறகு தனது பிறந்த நாளை கேக் வெட்டி அந்த இல்லத்திலேயே கொண்டாடினார். பிறகு தனது பிறந்த நாளையொட்டி புதிய படத்திற்கான போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த படத்திற்கு " வீரமே வாகை சூடும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஷால் ஏற்கனவே ENEMY திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் ஆர்யா இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான டிரெய்லர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது தான் இந்த படத்திற்கான முதல் பாடல் பத்தல என்கிற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இப்படத்திற்கான எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் தனது பிறந்த நாளை ஒட்டி நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய படத்துக்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷாலின் அனைத்து படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற கூடியவை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த சக்ரா திரைப்படம் ஓட்டி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அங்க திரைப்படமும் நன்றாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ENEMY திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

