நீங்கள் உங்கள் மொபைலில் Telegram சேனல் ஓபன் செய்ய வேண்டும் என்றால் முதலில் உங்கள் மொபைலில் Telegram அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பிறகு உள்ளே வாருங்கள். அங்கே ஒரு பென்சில் போல ஒரு ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு New group , NEW secret chat, NEW channel என்று மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் நீங்கள் நியூ சேனல் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது உங்களுடைய நியூ சேனல் நேம் கேட்கப்படும். அதில் நீங்கள் உங்கள் சேனலுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்களோ அந்த பெயரை என்டர் செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் சேனலுக்கு நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்கள் என்றால் கீழே description என்கிற இடத்தில் குறிப்பிட்டு கொள்க.
உங்கள் சேனலுக்கு நீங்கள் ஏதேனும் லோகோ வைக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் சேனல் நேம் என்டர் செய்த இடத்தில் பக்கத்தில் ஒரு கேமரா போன்ற ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் லோகோவை சேர்த்துக் கொள்க.
உங்கள் சேனல் லோகோவை சேர்த்த பிறகு மேலே டிக் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக உங்கள் சேனலை பிரைவேட் சேனலா? அல்லது public சேனலா? என்று கேட்கும்.
அதில் நீங்கள் உங்கள் சேனலை பிரைவேட் சேனல் என்றால் நீங்கள் மற்றவர்களுக்கு லிங்க் அனுப்பினால் மட்டுமே அவர்கள் உங்கள் சேனலில் சேர்ந்து கொள்ள முடியும். ஆனால் அதுவே பப்ளிக் சேனலாக இருந்தால் யார் வேண்டுமானாலும் டெலிகிராம் அப்ளிகேஷனில் வந்து உங்கள் சேனலின் பெயரை குறிப்பிட்டு சேர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இதில் எதை குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அதனை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்கள் சேனல் காண லிங்க் நீங்களே உங்கள் சேனலின் பெயரை என்டர் செய்து உருவாக்கிக் கொள்ள முடியும். லிங்க் உருவாக்கி முடித்தவுடன் இப்பொழுது மேலே டிக் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது add subscribers என்கிற ஒரு ஆப்ஷன் வரும். அதில் நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள டெலகிராம் பயன்படுத்துவோர் Contacts இருக்கும்.
அதில் நீங்கள் யாரை எல்லாம் குழுவாக சேர்க்க விரும்புகிறீர்களோ ? அவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக கிளிக் செய்து கொள்ள வேண்டும். க்ளிக் செய்த பிறகு கீழே next என்கிற அர்த்தமுடைய ஒரு குறியிட்ட பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் சேனல் உருவாக்கி விட்டது.
